search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருவர் பலி"

    • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
    • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

    இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • துப்பாக்கி நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு ட்பட்ட லோயர்கேம்ப், கப்பாமடை பீட்டு, வண்ணாத்திப்பாறை, காப்புக்காடு, முடாரிசரகம் ஆகிய பகுதிகளில் ஒருசிலர் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கடந்த மாதம் 29ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனக்காவலரை தாக்க முயன்றதாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல், போராட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈஸ்வரன் உடலில் எந்த இடத்தில் குண்டு பாய்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை நடத்தவும் ஒத்துழைப்பு அளிக்க உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் கூடலூர் போலீஸ் நிலையத்திலும் ஈஸ்வரன் இறப்பு குறித்து பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் இறந்து கிடந்த இடம் மற்றும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
    • பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், முத்து. முத்துவின் உறவினர் அந்தமானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர டிரைவர் முத்துவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சித்தர் கோவில் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

    • நிலத்தை உழுது கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட தேந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கிருஷ்ணன் (33), இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை தேந்தூர் பகுதியில் விவசாய நிலத்தை டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணன் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், விபத்தில் சிக்கிய அவரை மீட்டனர். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
    • கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் வட்டமலை, காந்தி நகரில் வசிப்பவர் ரவிக்குமார் (வயது 36.). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்று காலை, எதிர்மேடு, தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோ தித்த டாக்டர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்கள்.

    மற்றொரு விபத்து

    ஈரோடு மாவட்டம், சித்தார் பகுதியில் வசிப்பவர் சதீஸ்குமார் (28.) இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் தன் நண்பனை பார்ப்பதற்காக, குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளை யம், மணி போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது, எதிரில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் வந்த வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், காவேரி ரெயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும், சம்பவ இடத்தில் கவனக்கு றைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழி யாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பது போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரிய வில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலை வீடுதிரும்பியபோதுராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாலூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது டி.ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூலித் தொழிலாளர்கள் 6 பேர் டிராக்டரில் முன்பக்கம் அமர்ந்து சென்றுள்ளனர்.
    • டிராக்டரில் அமர்ந்து சென்ற மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி(47) உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு வேர் கட்டை ஏற்றி க்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. டிராக்டரை விழுப்புரம் அருகே உள்ள மேல கொந்தை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 35), என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 6 பேர் டிராக்டரில் முன்பக்கம் அமர்ந்து சென்றுள்ளனர். 

    இந்த டிராக்டர் கேணிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்த புரத்திற்க்கு டேபிள், சேர் ஏற்றி சென்ற லாரி டிரைவரின்கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது அதி வேகமாக மோதியது. இதில் டிராக்டரில் இருந்த வேர் கட்டை முன் பக்கம் சரிந்து, டிராக்டரில் அமர்ந்து சென்றவர்கள் மீது பலமாக தாக்கியது. இதனால் டிராக்டரில் அமர்ந்து சென்ற மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி(47) உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சக்திவேல், சதீஷ், வெங்கடேஷ், ராஜ்குமார், திருநாவுக்கரசு, சரத்குமார் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மயிலம் போலீசார் விரைந்துசென்று உயிரிழந்த ரஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். 

    • வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார்.
    • அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    க்டலூர்:

    வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாரிவேந்தர் ( வயது29) பன்னீர்செல்வம் மகன் அறிவழகன் ( 26) தர்மலிங்கம் மகன் சுதாகர்( 30) ஆகிய 3 பேரும் பாரிவேந்தருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக கச்சிமைலூர் சென்றுவிட்டு மீண்டும் அரியநாச்சி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார். பாசார் கிராமம் கொளஞ்சியப்பன் வயல் அருகே வந்தபோது வளைவில் வாகனம் திரும்பும் போது எதிர்பாராத விதமாக இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட 3 பேரையும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அறிவழகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து இறந்த அறிவழகன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • சாலையில் நடந்துசென்ற போது விபரீதம்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளுவர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது55) என்பவர் நேற்று போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது படியம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாலை ஓரம் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் நேரில் சென்று இறந்து கிடந்த முருகன் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்
    • மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா (வயது 51). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அபினேஷ் (வயது 19). என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    பல்லடம்:

    கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி ( வயது 51),டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36) , வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69) ,அவரது மனைவி மீனாட்சி (56) ,மகள் கிருத்திகா (29,)ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூர்த்தி (51) ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    பலத்த காயமடைந்த மற்றவர்களுகுகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    ×